உள்ளூறக் கள்ளூறுதே அமேசான் லிங்

ஹாய் டியர்ஸ்...
இதோ நேரடி கதையோடு வந்துட்டேன்.படிச்சுட்டுஸ்ரீஉங்க ஸ்டார்ஸ்ஸையும் கருத்தையும் தட்டிவிடுங்க.
உள்ளூறக் கள்ளூறுதே!
டீஸர்:-
சித்தார்த் இனியாவை இறுகிப்பிடித்திருந்தான்.அந்தபிடியை அவன் விடவேயில்லை.
இருவரும் அப்படியே நின்றிருக்க வெளியே வந்த வினித்துதான்”சித்தார்த்”என்று அழைத்ததும் அவளை விடுவித்தவன் வினித்தைப் பார்த்தான்.
“இவங்க இனியா.நம்ம மனோஜோட பியான்சி. ஏற்கனவே உன்கிட்ட பேசிருக்காங்கனாம்ல.நீதான அப்பாயிண்ட் பண்ணச்சொன்ன. அவங்கதான் இவங்க.மிஸ் இனியா”
“ஓஓ மிஸ் இனியா.மிஸ்டர் மனோஜோடா பியான்சியா? வெல்கம் டூ மை கம்பெனி மிஸ் இனியா
போய் வேலையைப் பாருங்க” கோபத்தில் பல்லைக் கடித்துக்கொண்டு சொன்னான்.
அவன் சொன்ன விதத்திலயே அவனது கோபத்தின் அளவு புரிந்தது.அதனால் அமைதியாக அங்கிருந்து நடந்தவளையே பார்த்திருந்தான்.
“மிஸ் இனியா உங்க வருங்கால கணவர் மிஸ்டர் மனோஜ் இங்கிருந்து நேத்தே வேலையை ரிசைன் பண்ணிட்டுப் போயிட்டானே. நீங்க எப்படி இங்க ஜாயிண்ட் பண்ணினீங்க? நீங்களும் நாளைக்கே ரிசைன் லெட்டர் குடுத்திருவீங்களா? எதுன்னாலும் எதுக்கு நாளைக்கு வரைக்கும் தள்ளிப்போடணும், இன்னைக்கே போனா நல்லாயிருக்கும்”என்று அவளைப் பார்த்தவாறே சொன்னான்.
என்னது மனோஜ் இங்க வேலைப்பார்க்கலையா. ரிசைன் பண்ணிட்டாரா? ரொம்ப சந்தோசம்பா என்று நினைத்தவளின் முகத்திலும் கண்களிலும் பிரகாசம் அதைப்பார்த்த சித்தார்த்துக்கு கோபம்தான் வந்தது.
“என்ன உன் வருங்கால் புருஷனை பத்தி பேசினதும் கண்ணுல ஒளி வருது. அவ்வளவு பிடிக்கும்போல அவனை?”என்று கோபத்தில் பற்களைக்கடித்துக்கொண்டு உறுமலோடு கேட்டான்.
அவன் அப்படிக் கேட்டதும்தான் ஐயோ நம்ம ஒன்னு நினைச்சா இவங்க ஒன்னு நினைச்சுத் திட்டுறாங்களே என்று நினைத்தவள் திரும்பி வினித்தைப் பார்த்தாள்.
“என்ன சித்து அவங்களே இன்னைக்குத்தான் ஜாயிண்ட் பண்ணிருக்காங்க.நீ வந்தன்னைக்கே ஓடவைக்கிற ப்ளான்ல பேசிட்டிருக்கடா”
“அப்படியில்ல வினித்து நேத்து ஒரு அம்மையார பொண்ணுக் கேட்கப்போனேன்னு சொன்னன்ல”
“அவங்க அப்பன் உன்னையும் அப்பாவையும் கேவலமா பேசினான்னு சொன்னியே.நேத்தே அவனைத் தட்டித்துக்கணும்னு குடிச்சிட்டுப் புலம்பிட்டிருந்தியேடா. ஏன் அவனைத் தூக்கிப்போட்டு மிதிக்கணுமா?”
அதெல்லாம் இல்லடா.நம்ம உசுறக்குடுத்து உண்மையா காதலிச்சு காத்திருந்துப் பொண்ணுக்கேட்டுப்போனா அவளுங்க கண்டவனுங்களையும் அப்பா சொன்னா ஆட்டுக்குட்டி சொன்னான்னு கட்டிக்க சம்மதிச்சிடுறாளுங்க. அப்படித்தான் இந்த அம்மையாரும் போல, வேலைப்போனதை சொல்லாமலயே இவளை இங்க வேலைக்கு ஜாயிண்ட் பண்ண வைச்சவன் எவ்வளவு பெரிய தில்லாலங்கடியா இருக்கணும்.இதே மாதிரி ஒரு நாதாரிதான் மருமகனா அந்த நாராயணனுக்கு வருவான் போலடா. தூக்குல தொங்கப்போறான் பாரு”என்று கேவலமாகத் திட்டினான்.
அதைக்கேட்டதும் இனியாவுக்கு கோபம் ஒருபக்கம் வந்தது என்றால் முணுக்கென்று கண்ணீரும் வந்துவிட்டது.
அதைப்பார்த்தவன் குருரமாகப் பார்த்து உதட்டை வளைத்துச் சிரித்தான்.
வினித்து இப்போதுதான் சித்தார்த்தையும் இனியாவையும் மாறி மாறிப்பார்த்தான்.
அவனுக்கு இப்போ கொஞ்சம் புரிந்தது.ஒருவேளை இதுதான் அவன் பொண்ணுப் பார்க்கப்போன காதலி இனியாவோ?என்ற சந்தேகம் வந்தது.
அதனால் சித்து இது இதுதான் அந்த பொண்ணா?என்று கேட்டான்.
“எந்தப்பொண்ணா?”
“நீ பொண்ணுக்கேட்ட பொண்ணா?”
அதற்கு பதில் சொல்லாது அவனது அறைக்குள் போய்விட்டான்.அவன் பின்னாடியே வினித்துப் போனான்.
இனியாவுக்கோ ஐயோவென்றிருந்தது.இத்தனை நாள் காத்திருப்புக்குப் பின் இப்போதான் வேலைக்கென்று வந்திருக்கேன்.அங்கேயும் ஒரு பெரிய ஆப்பா சொருவி விட்டிருக்கீங்களே கடவுளே.இது மட்டும் அப்பாவுக்குத் தெரிஞ்சா இப்பவே வந்துக்கூட்டிட்டுப் போயிடுவாங்களே.ஐயோ என்று தலையில் கைவைத்து உட்கார்ந்தவளுக்கு அடுத்து என்ன செய்யவென்று தெரியாது முழித்துக்கொண்டிருந்தாள்.
உடனே மனோஜிற்கு அழைத்தாள்.அவனோ இரண்டுமூணு காலுக்குப்பின்னாடிதான் அவளது போனை எடுத்தான்.
உடனே இனியா எப்படி இருக்க?என்ன என்னுடைய ஞாபகம் வந்துட்டா?போன் பண்ணிருக்க என்று கொஞ்சிப்பேச முயன்றான்.
அடுத்து அவள் என்ன கேள்விக் கேட்பாள் என்று தெரியும் என்பதால் அவன் பேச்சை மாற்ற முயன்றான்.
“நீங்க ஏன் வேலைக்கு வரல மனோஜ்.உங்களை அப்பா தேடினாங்க”
“ஓஓஓ அப்படியா?நீ அங்க ஜாயின் பண்ணிட்டியா என்ன?நான் லீவு இருக்கேன்.ஒரு ஆறுமாசம் லீவு போட்டிருக்கேன் இனியா.நம்ம கல்யாணத்துக்கு அப்புறம்தான் வேலைக்கு போவேன்.சித்தார்த் சார் எனக்கு வொர்க் ப்ரம் ஹோம் தந்திருக்காரு”
ஓஓஓ அப்படியா? என்று அவன் பொய் சொல்லுகிறான் என்று தெரிந்தும் கேட்டுக் கொண்டிருந்தாள்.
அவளது மண்டைக்குள்ளோ இவன் கட்டிக்கப்போற என்கிட்டயே இவ்வளவு பொய் சொல்லுறானே. அப்போ அப்பாக்கிட்ட எவ்வளவு பொய் சொல்லிருப்பான். உண்மையிலேயே இவன் நல்ல பையன்தானா? இல்லைஅப்பாவை ஏமாத்தி பணம் நகை வரதட்சணை வாங்க கல்யாணம் பண்ணிக்கப்போறானா? என்று யோசித்துக்கொண்டிருக்கும்போதே அவள் முன்னாடி ப்யூன் வந்து நின்றான்.
“புது மேடம் உங்களை சித்தார்த் சார் கூப்பிடுறாங்க.உடனே போவீங்களாம்” என்று தகவல் சொன்னான்.
இவங்க இப்போதானே நம்மளை வார்த்தையால வறுத்தெடுத்துட்டுப் போனாங்க மறுபடியும் எதுக்கு தனியா கூப்பிடுறாங்க என்று யோசித்தவாறே பயந்து பயந்து அங்கே போனவள் மெதுவாகக் கதவைத் தட்டிக்கொண்டு நின்றாள்.
“எஸ் கம்மின்”என்றவன் கண்டுக்காது தனது வேலையில் இருந்தான்.
திமிரப்பார்த்தியா இவனுக்கு.அந்த வில்லன் அப்படியேதான் இருக்கான். நிலா சொல்லும்போது தெரியல இப்போ நல்லாத்தெரியுது. கதிர்சார் வாழ்கைக்கு முதல் வில்லன் நிலா அக்கா நித்யான்னா இரண்டாவது வில்லன் இவன்தானே. அவரை அடிச்சது எல்லாமே இவனும் இவங்க அப்பாவும்தானே.அந்த குணம் இன்னும் இருக்கும்ல என்று முகத்தையும் உதட்டையும் சுழித்தவள் அவனையே பார்த்தவாறே நின்றிருந்தாள்.
உடனே நிமிர்ந்துப் பார்த்த சித்தார்த்”எதுக்கு என்னை சைட்டடிச்சிட்டிருக்க, போய் உன் வருங்காலத்தை சைட்டடி. எப்போ ரிசைன் பண்ணப்போற. எப்படியும் உன் வருங்காலம் சொல்லுறதைத்தானா கேட்கப்போற. அவன் வேலையைவிடுன்னு சொன்னா விட்றுவியே அவனை அவ்வளவு பிடிக்கும்ல உனக்கு. அதனால்தான என் தங்கச்சிக்கிட்ட கூட உன்னோட கல்யாண விசயத்தைச் சொல்லாம மறைச்சிருக்க. எப்படியான நட்பு.ச்சை”என்று கடித்துக் குதறாத அளவுக்குத் திட்டினான்.
அதைக்கேட்டவளுக்கு கோபம் சுள்ளென்று வந்தது.உடனே இங்கப்பாருங்க சார் நான் ஆறுமாசம் இங்க வேலை செய்யுறேன்னு சொல்லித்தான் வந்திருக்கேன்.யாரு சொன்னாலும் போகமாட்டேன். அதுக்கப்புறம் இப்படி என் பெர்சனல் விசயத்தை பேசுறதை நிறுத்துங்க. எனக்கு யாரை ரொம்ப பிடிக்கும் பிடிக்காதுன்னு நீங்க தெரிஞ்சிக்க வேண்டிய அவசியமில்லை”என்று பழைய இனியாவாக அவனிடம் பட்டென்று பேசினாள்.
அவ்வளவுதான் உடனே எழுந்தவன் அவளது கையைப்பிடித்து இழுத்து திருக்கி அவளது இடுப்புக்கு பின்னாடி வளைத்தவன் அவளிடம் நெருங்கி நின்று”எனக்கு தெரிஞ்சிக்கவேண்டிய அவசியமில்வையா? நான்தான் முக்கியாம தெரிஞ்சிக்கணும். உன்னை அன்னைக்கு பார்த்ததில் இருந்தே எனக்கு வேற எவளையும் பிடிக்கலைடி. ஆனாலும் இது சரிவராது தங்கச்சியோட பிரண்டு தப்பா போயிடும்னு நான் அமைதியா இருந்தேன். மூணு வருஷம் கழிச்சும் உன் நினைப்பு நெஞ்சுக்குள்ள இருந்து போகலை. இப்போ வீட்டுல கல்யாணத்துக்கு கட்டாயப்படுத்துறாங்கன்னதும் உன் ஞாபகம்தான்டி வந்துச்சு. உனக்கும் என்னை பிடிக்கும்னு உன் கண்ணுல அன்னைக்குத் தெரிஞ்சுதுடி. எனக்கும் அது தெரியும்.ஆனால் வேற எவனோ உன்னை கட்டிக்கப்போறான்னு வந்து என் முன்னாடி நிக்கிற. உனக்கு எவ்வளவு கொழுப்பு இருக்கணும்?”
“ஏன் கொழுப்பு இருந்தாதான் இப்படி பேசணுமா என்ன? உங்க வில்லத்தனம் எல்லாம் கதிர் சாரு வாழ்க்கையில காண்பிச்சது போதும். என் வாழ்க்கையில் காண்பிக்காதிங்க. நான்லாம் பயப்படமாட்டேன். எங்கப்பா யாரைச் சொல்லுறாங்களோ அவங்களைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்.அது என் விருப்பம்.இப்படி அதை அசிங்கமா பேசாதிங்க”
பார்றா என்னை வில்லன்னு சொல்லுறதை. செம காமெடி போ.நீ யாரை வேணும்னாலும் கல்யாணம் பண்ணு போ. எனக்கு நீ வேண்டாம்டி. இப்போ உன்னைய எனக்குப் பிடிக்கலடி. உங்கப்பன் அந்தாளு பேசினதை நினைச்சாலே கொலைவெறியாகுது. அதுலவேற நீ என் ஆபிஸ்லயே வேலைக்கு வந்து நிக்கிற.மரியாதைக்கு இப்பவே வேலையை ரிசைன் பண்ணிட்டு போடி”என்று அவளது கையை விட்டான்.
அவளுக்கு கை வேதனையெடுக்கவும் உதறிக் கொண்டிருந்தாள்.அவன் சொன்னதைக் கண்டுக்கவேயில்லை.
“அவள் கை வலியில் உதறுவதைபு பார்த்தவன் என்ன கை வலிக்குதா? போ போய் போய் உன் வுட்பீகிட்ட சொல்லு நல்ல கையை பிடிச்சு அமுக்கிவிடுவான்.உனக்கு அதுதானே பிடிக்கும்”
மிஸ்டர் இதுதான் உங்களுக்கு லிமிட்.எவன்கிட்டயும் நான் இளிச்சிட்டுப் போய் நிக்கவேண்டிய அவசியம் இல்லை.இந்த மனோஜ் வேண்டாம் வேற வரன் பார்த்திருக்கேன்னு எங்கப்பா சொன்னா அதுக்கும் தலையாட்டித்தான் நிற்பேன். அதுக்காக அவனையும் எனக்குப் பிடிச்சிருக்குன்னு அர்த்தம் இல்லை. கழுத்துல தாலியேறி இவன்தான் உன் புருஷன்னு உறுதியாகுற வரைக்கும் எவனையும் நான் மனசுல நினைக்கப்போறதில்லை.அதனால் உங்க கற்பனையை நிறுத்திட்டு எனக்கு எம்.டியா மட்டும்இருங்க போதும்.ஆபிஸ் விசயங்களை பேசுறதா இருந்தா கூப்டிடுங்க இல்லைன்னா கூப்பிடாதிங்க” என்றவள் அவனைத் திரும்பிப் பார்க்காது வேகமாக வெளியே போய்விட்டாள்.
இந்தியா லிங்
https://www.amazon.in/dp/B0FKTJKD9Z
அமெரிக்கா லிங்
https://www.amazon.com/dp/B0FKTJKD9Z
இங்கிலாந்து லிங்